ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் பாவனைக்காக ரூ. 5.7 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செலவு பத்து ஆண்டுகளுக்கானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2012 முதல் 2022 வரையான பத்து ஆண்டுகளில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் இந்த செலவுகள் செய்யப்பட்டுள்ளன.
மகிந்த உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் வாகன செலவு! வெளியான தகவல் | Luxury Vehicles For President Spends Rs 5 7B
வாகன பராமரிப்பு, பழுதுபார்த்தல், புதிய கொள்முதல் மற்றும் குத்தகை அடிப்படையில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கான தவணை கொடுப்பனவு உள்ளடங்கலாக ஜனாதிபதி செயலகம் ரூ. 5,722,926,340 (ரூ. 5.7 பில்லியனுக்கும் அதிகம்) செலவிடப்பட்டுள்ளது.
2012-2022 காலகட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின் பொது நிர்வாகச் செலவுகள் குறித்த தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பி/பிஐ/04/2023 என்ற தகவல் கோப்பில் இது தெரியவந்துள்ளது.

2012 மற்றும் 2022க்கு இடையில் வாகன பராமரிப்புக்காக மட்டும் ரூ. 1,865,640,511.00 செலவிடப்பட்டுள்ளது.
மேலும், 2012 மற்றும் 2022கஇற்கு இடையில் வாகன பழுதுபார்த்தலுக்காக ரூ. 1,564,033,298 ரூபாவும், 2012 மற்றும் 2022 க்கு இடையில் வாகன கொள்வனவுக்கு மட்டும் ரூ. 48,908,155 செலவிடப்பட்டுள்ளதாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குத்தகை தவணைப் பணம் செலுத்தல் 1,781,843,095 ரூபா, செலவிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை 2012-2022 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது, அந்த காலத்தில் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பதவியில் இருந்துள்ளனர்.
No comments: