News Just In

4/02/2025 01:21:00 PM

தமிழரசுக் கட்சி உறுப்பினரின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு- சாணக்கியன் காட்டம்

தமிழரசுக் கட்சி உறுப்பினரின் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு- சாணக்கியன் காட்டம்.

வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் கட்சிகளில் அகிம்சை முறையை பின்பற்றும் தமிழரசுக் கட்சியினைத் தவிர மற்றைய கட்சிகள் அனைத்தும் ஆயுத குழுவாக இருந்து ஜனநாயக முறைக்கு அமைய கட்சியாக மாறியவர்கள். இவ் தேர்தல் பரப்புரைகள் ஆரம்பித்து இருக்கும் இவ் நாட்களில் எமது அகிம்சை முறையை பின்பற்றும் எமது கட்சியான தமிழரசுக் கட்சிக்கு அச்சுறுத்தலாக வேட்பாளர்களுக்கு எதிராக பெட்ரோல் குண்டு வேட்பாளரின் வீட்டில் வீசப்படுள்ளது. இவ்வாறான பல சம்பவங்கள் பல இடங்களில் எமது கட்சிக்கு வேட்பாளருக்கும் எதிராக இடம்பெற்று வருகின்றது. இவற்றினை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையாளர் இவ்வாறான அக்கிரமங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான அநீதியான விடயங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்

No comments: