ஆசிரியரும் இலக்கிய ஆர்வலரும் கவிஞருமான ஏறாவூர் தாஹிர் எனும் புனைப்பெயர் கொண்ட எஸ்.எச். அஹமத் லெப்பையின் “பெயர் என்ன வைக்கலாம்” எனும் நான்காவது கவிதை நூல் வெளியீடு செவ்வாய் இரவு 14.05.2025 இடம்பெற்றது.
ஏறாவூர் அறபா வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளரும் ஏறாவூர் “இனசமதி” கலை இலக்கிய நூலின் ஆலோசனை ஏற்பாட்டாளருமான எஸ்எல்.எம். ஹனிபா, காத்தான்குடி பிரதேச செயலாளர் வி. நிஹாறா, வாழைச்சேனை மத்தி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா, எழுத்தாளரும் கலை இலக்கியவாதியுமான வைத்திய அத்தியட்சகர் ஜலீலா முஸம்மில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். முபாஸ்தீன் ஏறாவூர் ஸ{ஹதாக்கள் பேரவையின் தலைவரும் ஏறாவூர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் உட்பட இன்னும் பல இலக்கிய ஆர்வலர்களும் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விஞ்ஞானப் பாட ஆசிரியரான கவிஞர் ஏறாவூர் தாஹிர், இதற்கு முன்னர் “கடைசி வரிகள்”;, “மறக்க மறந்த மனிதம்”; “முழுமதி நபிகள்” ஆகிய தலைப்புகளில் கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
No comments: