News Just In

2/15/2025 07:43:00 PM

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் “செயல்களை முன்னெடுப்போம்-பொறுப்புடன் செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் முதலாம் வார செயற்பாடுகள் ஆரம்பிப்பு.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் “செயல்களை முன்னெடுப்போம்-பொறுப்புடன் செயற்படுவோம்” எனும் தொனிப்பொருளில் முதலாம் வார செயற்பாடுகள் ஆரம்பிப்பு.


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் முதலாம் வார நிகழ்வுகள் பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது கல்வி, கல்வி சாரா பணிக்குழு மற்றும் மாணவர்கள் அனைவரும் இவ் வேலைத்திட்டம் தொடர்பான சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவ் வேலைத்திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கும் கல்வி மற்றும் கல்வி சாரா பணி குழுவினருக்கும் தெளிவு படுத்தும் நிகழ்வுகள் பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டதோடு பாடசாலை மட்ட Clean Sri Lanka வழிப்படுத்தல் குழுவினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் சிரேஷ்ட மாணவர்கள் தலைமையில் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக்காக மாணவர்கள் சார்பாக செயற்குழு ஆரம்பிக்கப்பட்டு பொறுப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது. செயல்களை முன்னெடுப்பொம் - பொறுப்புடன் செயற்படுவோம் தொனிபொருளினாலான வீடியோ காட்சிகளும் Smart Board துணையுடன் காட்சிப்படுத்தப்பட்டது. நாளாந்த சுகாதார மற்றும் சுத்தப்படுத்தல் செயற்பாடுகளை மேற்பார்வை செய்ய மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டது

No comments: