பொலநறுவை இரண்டாம் சிவாலயத்தில்மிகவும்பக்திபூர்வமாக சிவராத்திரி தின நிகழ்வுகள்
பொலநறுவை இரண்டாம் சிவாலயத்தில் மிகவும் பக்திபூர்வமாக சிவராத்திரி தின நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்த நிகழ்வில் இந்து அடியார்கள் கலந்து கொண்டு சிவனின் இஷ்ட சித்திகளை பெற்றனர்.
பொலநறுவையில் காணக்கூடிய இந்த 2ம் சிவாலயம் 10 ஆம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் கட்டுவிக்கப்பட்டது எனக் கருதப்படுகின்றது.
பொலநறுவைக் காலத்தைச் சேர்ந்த மிகப் பழைய ஆலயம் இதுவாகும். இவ்வாலயம் “வானவன் மாதேவி ஈசுரமுடையார்” என அழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
2/28/2025 10:52:00 AM
பொலநறுவை இரண்டாம் சிவாலயத்தில் மிகவும் பக்திபூர்வமாக சிவராத்திரி தின நிகழ்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: