News Just In

2/02/2025 05:38:00 PM

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்


மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது.

மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்

No comments: