News Just In

2/18/2025 11:34:00 AM

தென்றல் பாடும் தாலாட்டு கவிதை நூல் வெளியிட்டு வைப்பு!

தென்றல் பாடும் தாலாட்டு கவிதை நூல் வெளியிட்டு வைப்பு



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

பாவலர் கவிமாமணி ஏறாவூர் எம்.ரி.எம். அன்ஸார் எழுதிய தென்றல் பாடும் தாலாட்டு கவிதை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

நூலாசிரியரின் முன்னாள் வகுப்புத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் ஏறாவூர் பிரதேச செயலக நிருவாக அதிகாரி எஸ். அப்துல் றஹீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நூலாசிரியரால் 1986ஆம் ஆண்டு தொடக்கம் எழுதப்பட்டு இலங்கையின் தேசிய நாளிதழ்களில் வெளிவந்ததும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டவைகளுமான கவிதைகள் நூல் தொகுப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் நயவுரையை நூலாசிரியரின் முன்னாள் வகுப்புத் தோழரானா தற்போது எறாவூர் நகர பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ சேவைப் பிரிவில் கடமையாற்றும் என்.எம். ஜாபிர் நிகழ்த்தினார்.

நிகழ்வில், யுத்தம், இயற்கை இடர்கள் இடம்பெற்ற நெருக்கடியான காலகட்டங்களில் மக்களது வாழ்க்கை நிலைமைகளை கவிதைகளால் குறிப்புணர்த்தி வெளிக்காட்டிய நூலாசிரியரியன் இலக்கிய நயம் சிலாகித்துப் பாராட்டப்பட்டதோடு பொன்னாடை போர்த்தியும் அவருக்கு கௌரவமளிக்கப்பட்டது.

No comments: