News Just In

2/14/2025 02:39:00 PM

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம்; உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!




உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது அல்ல என்றும், நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டமூலம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்தக் கருத்தை வெளியிட்டார்.

மேலும் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்

No comments: