News Just In

2/05/2025 03:02:00 PM

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்

அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்




மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 75 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்து இன்று புதன்கிழமை (05) அதிகாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மீரிகமவிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

தீயணைப்பு படையினர் இணைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.




No comments: