News Just In

1/19/2025 02:43:00 PM

கடற்பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம் - கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

கடற்பிராந்தியங்களில் அதிகரிக்கும் காற்றின் வேகம் - கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை



கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையை ஒட்டிய கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, குறித்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்,

மேற்படி கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகம் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: