News Just In

12/19/2024 12:44:00 PM

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி!

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பைரோஸிஸ்) தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸடீனின் ஆலோசனைக் அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இந்த விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டன

இதில் எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதன் போது சாய்ந்தமருது குடாக்கரை மேற்கு விவசாயிகள் சங்கத்தின் உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: