News Just In

12/06/2024 11:00:00 AM

பாரிய குற்றங்களை இளைத்த குற்றவாளிகளை : சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - சிறிநேசன் எம். பி

பாரிய குற்றங்களை இளைத்த குற்றவாளிகளை : சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் - சிறிநேசன் எம். பி


இலங்கையில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார்.

இது தொடர்பான விவாதம் நேற்று (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது கொள்கை விளக்க உரையினை நிகழ்த்தி இருந்தார்.

அது தொடர்பான விடயங்கள் தற்போது விமர்சனத்திற்கு உற்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இது குறித்து தமிழரசுக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உரையாற்றுகையில்,

உண்மையில் இலங்கையின் வரலாற்றை எடுத்து கொண்டாலும் சரி பாராளுமன்ற வரலாற்றை எடுத்து கொண்டாலும் சரி பிரச்சனைகளை தீர்க்க கூடிய விதத்தில் மக்கள் சந்தர்ப்பங்களை அளித்து இருந்தார்கள்.

குறிப்பாக சொல்ல போனால் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பொதுஜன பெரமுண போன்ற காட்சிகள் பாராளுமன்றத்தில் அவ்வப்போது சந்தர்ப்பங்களை வழங்கி இருந்தார்கள்.

ஆனால் வழங்கப்பட்ட எந்த சந்தர்ப்பங்களும் முறையாக பின்பற்றபடவில்லை, பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.

அனால் 2024 ஆம் ஆண்டில் ஒரு சந்தர்பம் இடதுசாரி கட்சிகளுக்கு கிடைக்கவில்லை இன்றைக்கு இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்து இருக்கிறது.

ஒரு வித்தியாசமான ஜனாதிபதி எளிமையாக நடந்து கொள்ள கூடியவர் தன்னுடைய வெற்றியை ஆடம்பரமாக கொள்ளாதவர் இன்று ஆட்சி பீடத்தில் ஏறி இருக்கின்றார்.

அதாவது நாற்பதுக்கும் மேலான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கபடவில்லை இந்த நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா என்கின்ற கேள்வி காணப்பட்டது.

சுருக்கமாக சொல்ல போனால் பண நாயகம் நாட்டை ஆட்சி செய்தது வீதிகள் எல்லாம் பிணங்கள் குவிந்து காணப்பட்டது.என்று அவர் கூறினார்.

மேலும், அவர் கருத்துத் தெரிவிக்கையில், நான் சொல்ல கூடியது என்னவென்றால் இந்த ஆட்சியில் பாரிய குற்றங்களை இளைத்து விட்டு கௌரவர்களாக உலாவி வந்த அந்த குற்றவாளிகள், சட்டத்தின் முன் நிறுத்த பட வேண்டும்.

அவர்களுக்கு முறையான தண்டனைகள் வழங்கபடுவதன் மூலமாக சட்டவாட்சியை பலப்படுத்த வேண்டும் என்று இந்த இடத்திலே கூறிக்கொள்கிறேன், எனத் தெரிவித்தார்

No comments: