நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, இன்றைய அமர்வின் போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில் சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க இடையில் குறுக்கிட்டு கிண்ணியாவில் சஜித்தின் தேர்தல் பிரசார மேடையில் அர்ச்சுனா இருந்ததை சுட்டிக்காட்டினார்.
இன்றைய அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தாக்கி பேசியிருந்தார்.
இந்தநிலையில், பிமல் ரத்னாயக்க கிண்ணியா தேர்தல் பிரசார மேடை குறித்து நகைச்சுவை தொனியில் பேசியதும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அதன் பின்னர் சபையில் அமைதியானார்.
No comments: