News Just In

12/23/2024 10:31:00 AM

எழுத்தாளர் கைது - பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எழுத்தாளர் கைது - பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்



எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹினட்டிகலவை அதுருகிரிய பொலிசார் கைது செய்தமை தொடர்பில், உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மருமகனான கசுன் மகேந்திர ஹினட்டிகல, பொலிஸ் தலைமையகத்தில் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் கொழும்பு தெற்கிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தம்மை பொலிஸ் அதிகாரிகள் வீதியில் வைத்து பலவந்தமாக கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக கசுன் மகேந்திர ஹினட்டிகல தெரிவித்துள்ளார்

No comments: