மட்டக்களப்பு - ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் நிலவும் அவசிய மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் அவசர உதவியாக சிறுவர்களுக்கான அவசிய ஒரு தொகுதி குறை நிவர்த்திக்கும் மருந்துப் பொருட்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
Theophylline syrup போன்றவற்றை குறை நிவர்த்திக்கும் வகையில் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் நிருவாகம் சார்பில் வைத்தியர்கள் சிறுவர் விடுதிக்கான தாதிய உத்தியோகத்தர் அடங்கிய குழுவிடம் சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இந்த மருந்துப் பொருள் தொகுதி கையளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையின் இடராயத்த செயற்பாடுகளில் ஒரு அங்கமாக சிறுவர்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு தொடர்பிலும் கவனமெடுத்து இந்த மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments: