News Just In

12/30/2024 10:51:00 AM

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிப்பு




2025ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்தின் கீழ் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இருந்து இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், 10ஆம் திகதி ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.

மேலும், ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஓய்வூதியம் 9ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 7ஆம் திகதி ஓய்வூதிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: