News Just In

11/24/2024 05:30:00 PM

நீர்கொழும்பில் படகு விபத்து; தந்தையும் மகளும் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்

நீர்கொழும்பில் படகு விபத்து; தந்தையும் மகளும் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்



நீர்கொழும்பு முன்னக்கரை குளம் பகுதியில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இதில் 50 வயதுடைய நபரும் அவரது 20 வயதுடைய மகளும் காணாமல் போயுள்ள நிலையில் மேலும் ஐவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து அண்மையில் நாடு திரும்பிய கத்தோலிக்க மதகுரு உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற படகு, இன்று பிற்பகல் தடாகத்தில் மற்றுமோர் பெரிய படகுடன் மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து அருகில் இருந்த படகு குழுவினர் பாதிரியார் உட்பட ஐந்து பேரை மீட்டுள்ளனர்.

எனினும், படகில் பயணித்த தந்தையும் மகளும் காணாமல் பேயுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் இருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னக்கரையைச் சேர்ந்த மூன்று ஆண்கள், நான்கு பெண்களுமே இந்த விபத்தினை எதிர்கொண்டவர்கள் ஆவார்.

காணாமல் போன இருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments: