அர்ப்பணிப்பான சேவையை வழங்குவேன் - சத்தியலிங்கம்
என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனம் வழங்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
பாரிய பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது பல அபிவிருத்தி திட்டங்களை செய்திருந்தேன். இருந்த போதும் ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் என்னை நிராகரித்தனர். அதற்கு பல காரணம் உள்ளது.
எனக்கு எதிரான போலிப்பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகளும் போட்டியாளர்களும் முன்வைத்திருந்தனர். அது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. எனது தொழில் அரசியல் அல்ல. நான் ஒரு வைத்தியர். கட்சி இந்த பதவியை தராவிட்டால் மீண்டும் ஒரு அரச உத்தியோகத்தராக செயற்படும் எண்ணத்திலே இருந்தேன்.
வன்னிமாவட்டமானது திட்டமிட்ட இன அழிப்பு இடம்பெறுகின்ற ஒரு பிரதேசம். எனவே அதை உணர்ந்து செயற்ப்படக்கூடிய ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை அறிந்துகட்சி இந்த ஆசனத்தை வழங்கியுள்ளது.
என்மீது கட்சிவைத்த நம்பிக்கையை ஏற்று இந்தபகுதி மக்களுக்கு முழுமையான எனது சேவையை அர்ப்பணிப்போடு செய்வேன். அந்தவகையில் வாக்களித்த வாக்களிக்காத மக்களுக்கும் நன்றிகள். கட்சிக்கும் நன்றிகள்.
இனிவரும் ஐந்து வருடங்களில் சத்தியலிங்கம் எப்படி செயற்ப்படுவார் என்பதை அனைவரும் நிச்சயமாக பார்ப்பீர்கள். கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் தொடருவேன். அது பொதுச்சபையில் தீர்மானிக்கபடக்கூடிய ஒரு விடயம். அதனை விடுவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எற்ப்படவில்லை என்றா
11/18/2024 06:08:00 AM
அர்ப்பணிப்பான சேவையை வழங்குவேன் - சத்தியலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: