News Just In

11/24/2024 10:08:00 AM

மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு கூட்டமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்

மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு கூட்டமும் உபகரணங்கள் வழங்கி வைப்பும்


நூருல் ஹுதா உமர்

மருதமுனை வைத்தியசாலை அபிவிருத்தி குழு கூட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோரின் பங்கேற்புடன் சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்றது.

இதில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பிரதேச வைத்திய அதிகாரியும் அதன் தலைவருமான டாக்டர் ஐ.எல்.எம். மிஹ்லார் அவர்களும் சங்கத்தின் செயலாளர், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வைத்தியசாலைக்கு தேவையான சில உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் வைத்தியசாலை முகம் கொடுக்கின்ற சவால்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டு செல்வதற்கும் அதன் குறுங்கால நீண்டகால அபிவிருத்தி தொடர்பிலும் இக்கூட்டத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது

No comments: