குறுஞ்செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் - கடுமையான சட்டத்தை அமுலாக்க நடவடிக்கை
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நிறைவடைந்ததும், இரவு 7.30 மணிக்கு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதற்கமையை, வாக்கு எண்ணும் நடவடிகைகள் மூன்று கட்டங்களாக இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
அதேபோல், தேவையின்றி வெளியில் நடமாடுதல், கொண்டாட்டங்களில் ஈடுபடுதல் போன்ற அவசியமற்ற செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்ளுமாறும் வீடுகளிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறும் அவர் அறிவித்தார்.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமையை வாக்கெடுப்பு நிலையத்தில் புகைப்படம் எடுத்தல், காணொளி பதிவு செய்தல் போன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டது என்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்
அதன்படி, தேர்தல் பணிகளுக்காக வழங்கப்படும் நியமனங்களை எந்த வகையிலும் மாற்றவோ, ரத்து செய்யவோ கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேட்பாளர்களின் பெயர் மற்றும் போட்டி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தொலைபேசி இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்திகள் மற்றும் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களுக்கு கடுமையாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இதுதொடர்பில் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் பிரசார நோக்கில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: