சரிந்து வீழ்ந்த மண்மேடுகள்; ரயில் போக்குவரத்து தடை - பொலிஸாரின் அவசர அறிவிப்பு
மலையக ரயில் மார்க்கத்தின் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் வீதி தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான ரயில் வீதியில் மண்மேடுகளும் கற்களும் சரிந்து வீழ்ந்துள்ளமையினால் இந்த தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் இயங்கும் ரயில் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், மரங்கள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை பண்டாரவளை வீதி உடுவர கிரிமண்டலயத்திற்கு அருகில், ஹப்புத்தளை பெரகல வீதி, பதுளை - பசறை வீதி மூன்றாம் கம்பம், பதுளை கந்தன ஊடாக ஸ்பிரிங்வேலி வீதி ஊடாக, பதுளை பசறை வீதியின் 7 ஆம் கம்பம், பிபில லுணுகல வீதியில் அரவாகும்புர ஆகிய வீதிகள் தடைப்பட்டுள்ளன.
வீதிகள் தடைப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
11/26/2024 09:25:00 AM
சரிந்து வீழ்ந்த மண்மேடுகள்; ரயில் போக்குவரத்து தடை - பொலிஸாரின் அவசர அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: