வைத்தியசாலையில் குத்திக் கொலை செய்யப்பட்ட வைத்தியரின் மனைவி! திருமலையில் சம்பவம்
திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இன்று (05) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் வசித்து வந்துள்ள நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்தவகையில் முதற்கட்டமாக உயிரிழந்த பெண்ணின் கணவரது சகோதரனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
11/05/2024 12:45:00 PM
வைத்தியசாலையில் குத்திக் கொலை செய்யப்பட்ட வைத்தியரின் மனைவி! திருமலையில் சம்பவம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: