News Just In

11/29/2024 07:06:00 PM

கல்குடா பொலிஸ் பிரிவில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்!

கல்குடா பொலி ஸ்   பிரிவில் பல இடங்களில் திருட்டுச் சம்பவங்கள்



கல்குடா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை (29) இரவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இவ் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவுகள், ஜன்னல் பகுதிகளை உடைத்து பெறுமதிவாய்ந்த வீட்டு உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளனர்.

திருடர்களை பிடிப்பதற்காக மட்டக்களப்பு குற்ற தடயவியல் பிரிவு பொலிசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மோப்ப சக்தி நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

திருடர்களிடமிருந்து தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிசார் பிரதேச மக்களை கேட்டுள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவ் அசாதாரன சூழ்நிலையை பயன்படுத்தி திருட்டு சம்பங்கள் இடம்பெற்று வருகிறது

No comments: