News Just In

11/29/2024 04:21:00 PM

நிந்தவூர் மத்ரஸாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஷ்டிப்பு.!

நிந்தவூர் மத்ரஸாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஷ்டிப்பு.!!



நூருல் ஹுதா உமர்

வெள்ளநீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்கள் உட்பட ஏனையோருக்கு அம்பாறை மாவட்டம், நிந்தவூர், மாவடிப்பள்ளி சம்மாந்துறைப் பகுதியில் வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு தூக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபிக்கல்லூரி மத்ரஸாவில் கல்வி கற்று மரணமடைந்த மாணவர்களின் மறுவாழ்விற்காக துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டது. நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியில் ஷரீஆ மற்றும் ஹிப்ழ் பிரிவில் முழு நேரமாக கல்வி கற்று வந்த அனைத்து மதரஸா மாணவர்களுக்கும் காலநிலை சீற்றத்தின் காரணமாக மத்ரசாவினால் கடந்த 26-11-2024 செவ்வாய்க்கிழமை மாலை விடுமுறை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சம்மாந்துறைப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தமது பிரதேசத்திற்கு செல்லும் வழியில் காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்தடியில் வெள்ள அனர்த்தத்தின் அகப்பட்டு மரணமடைந்த சம்பவமானது முழு நாட்டையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இம்மாணவர்களின் தவிர்க்க முடியாத பிரிவின் காரணமாக துக்கத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் சமூக நலன்விரும்பிகளால் வெள்ளைக் கொடி பறக்க விடப்பட்டது. அதே போன்று, இன்றைய தினம் (29) வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கீழ் இயங்கக்கூடிய அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் இடம்பெறக்கூடிய குத்பாக்களிலும் ஷஹீதுகள் உடைய அந்தஸ்து தொடர்பாக உரை நிகழ்த்தப்பட இருப்பதுடன், ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து மரணம் அடைந்த மாணவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments: