முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா பதவியில் இருந்த காலப்பகுதியில், வீடமைப்பு திட்டத்திற்காக வெளிநாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூர் சம்சம் கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கான விடமைப்பு திட்டத்திற்காக வெளிநாட்டில் அந்த பணத்தினை பெற்றதாகவும்,அதில்50 குடும்பங்களுக்கான வீடுகள் கட்டி வழங்கப்பட்ட போதும், மேலும் 100 குடும்பங்களுக்கான வீடுகள் இன்னமும் கட்டிக்கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்சம் கிராமத்தில் வாழும் குடும்பங்களின் ஏற்பாட்டில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,
எமது மக்களின் நிலைமைகளை சுட்டிக்காட்டி வீடு கட்டி கொடுப்பதாக கூறி அரபு நாட்டில் இருந்து பணத்தை ஹிஸ்புல்லா பெற்றபோதும் சரியான முறையில் வீடுகள் வழங்கப்படவில்லை.
மேலும், மழை காலங்களில் வெள்ள அபாயங்களை எதிர்நோக்கி வருவதினை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளளோம். ஒரு வீட்டினுள் 3,4 குடும்பங்கள் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
இங்கு வசிப்பவர்களுக்கு செம்மையான ஒரு வீடு இல்லை. அத்தோடு வீதிகள் ஒழுங்கு இல்லை.
ஐயங்கேனி, தளவாய், கொம்மாதுறை ஆகிய பகுதிகளில் 1500 ஏக்கர் காணியில் 150 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறி அரபு நாட்டவர்களிடம் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹிஸ்புல்லா பணத்தினை பெற்றுள்ளார்.
அந்த ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. இந்த பணத்தில் 50 வீடுகள் மாத்திரம் தான் கட்டப்பட்டுள்ளது. நூறு வீடுகள் இன்னும் கட்டிக் கொடுக்கப்படவில்லை..
இந்த அரசில் எவரும் ஊழல் செய்ய முடியாது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்’’ என கூறியுள்ளனர்.
இந்த அரசில் எவரும் ஊழல் செய்ய முடியாது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்’’ என கூறியுள்ளனர்.
No comments: