News Just In

11/22/2024 06:20:00 PM

மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு வாகரையில் மக்கள் போராட்டம்

மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பு வாகரையில் மக்கள் போராட்டம்





வாகரை பகுதியில் மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று
எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டுமுனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த சில மாதங்களாக மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சுமத்தியிருந்தனர்.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட பல தரப்பினரும், மின்வெட்டால் பாதிக்கப்படுவதாகசுட்டிக்காட்டப்பட்டது

மின்சார சபையின் இச் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே’, ‘மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சுமார் 1 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இப் போராட்டத்தின் நிறைவில், வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.போராட்டம் இடம்பெற்ற போது வாகரைப் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: