News Just In

11/23/2024 10:25:00 AM

நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு - நெருக்கடியில் மக்கள்!

நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு - நெருக்கடியில் மக்கள்



நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் லாப் எரிவாயுநிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது,தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலைமையால் நாடளாவிய ரீதியில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: