News Just In

10/27/2024 11:09:00 AM

இலங்கையில் தனது வணிக நடவடிக்கைகளை முடித்து கொண்ட மெக்டொனால்ட்ஸ்!

இலங்கையில் தனது வணிக நடவடிக்கைகளை முடித்து கொண்ட மெக்டொனால்ட்ஸ்!



மெக்டொனால்ட்ஸ் குழுமம் மற்றும் அதன் இலங்கையிலுள்ள கிளைகளுக்கு உரிமையாரானசர்வதேச உணவக அமைப்புகள் நிறுவனம் தங்களது வணிக உறவை முறித்துக் கொண்டதாக கூட்டாக அறிவித்துள்ளது.

இலங்கையில் தனது கிளைகளுடனான வணிகத்தை முடித்து கொள்வதோடு, தங்களுக்கு ஆதரவு அளித்த பொதுமக்களுக்கு நன்றியை மெக்டொனால்ட்ஸ் தெரிவித்துள்ளது.

மெக்டொனால்ட்ஸ் குறித்து அண்மைக் காலங்களில் ஊடகங்களில் வெளிவந்த வதந்திகள் அல்லது ஊகங்களை நம்பவேண்டாம் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ளன.

குறித்த அறிக்கையில் மெக்டொனால்ட்ஸ் கிளைகளை இலங்கையில் மூடுவதற்கான காரணங்கள் பற்றிய விவரங்களை வழங்கவில்லை.

மெக்டொனால்ட்ஸ் இலங்கையில் புதிய செயல்பாடுகளைத் தொடருமா என்பதைக் குறிப்பிடவில்லை.

No comments: