News Just In

10/30/2024 06:53:00 PM

கிளிநொச்சியில் உயர் தர மாணவர்களுக்கு செயலமர்வு!


கிளிநொச்சியில் உயர் தர மாணவர்களுக்கு செயலமர்வு!



யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீடம், சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக, உயர் தர உயிரியல் மற்றும் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு இன்று நடத்தப்பட்டுள்ளது.விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் செயலமர்வு இடம்பெற்றது.

விவசாயபீட பீடாதிபதி க.பகீரதன் தலைமையில் இடம்பெற்ற செயலமர்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று செயன்முறைகளையும் விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.இந்த செயலமர்வில் மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் குறித்த பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர்

No comments: