News Just In

10/24/2024 01:42:00 PM

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாமலிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாமலிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை




முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

2010 - 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட நிதி விவகாரங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: