News Just In

10/16/2024 10:44:00 AM

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை..! - மகிந்த

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை..! - மகிந்த அறிவிப்பு




அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அத்துடன் ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுனவின் வெற்றி மிக எளிதாக உள்ளது.

தான் தற்காலிக ஓய்வு எடுத்துள்ளதாகவும் அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ராஜபக்சகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து உருவாகியுள்ளது என எழுப்பப்பட்ட கேள்விக்கு ஷசீந்திர ராஜபக்ச மொனராகலின் போட்டியிடுகிறார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன கட்சி 113 ஆசனங்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

No comments: