ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஆரையம்பதி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரையம்பதி மகா வித்தியாலய மாணவர்களுக்கும், ஆரையம்பதி இராமக்கிருஸ்ண மிஷன் பாடசாலை மாணவர்களுக்கும் 15.10.2024 இன்று சுகாதார கல்வி பற்றிய கருத்தரங்கு ( Health Education programme) வைத்திய அதிகாரி Dr. தே.திலக்ஷன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோரும் பங்குபற்றினர்.
இதில் " அனர்த்தத்தின் அவசர நிலைமையின் போதும் அதற்கு பின்னரும் நமது உடல் நலத்தையும் மற்றும் நல் வாழ்வையும் பாதுகாத்தல்"மற்றும் இளவயது திருமணம் தவிர்த்தல் ( Teenage pregnancy) , இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான வழிகாட்டுதல்கள் ஆலோசனைகள் என்பன பற்றிய விளக்கமளிக்கப்பட்டதோடு அவை தொடர்பாக பல அறிவுரைகளும் வழங்கப்பட்டது.
No comments: