News Just In

10/28/2024 07:00:00 PM

தேர்தலின் பின் அநுரவிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து!

தேர்தலின் பின் அநுரவிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து


நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு உள்ளது.

அவ்வாறானதொரு சூழ்நிலையில் அநுர தரப்பிற்கு, தங்களது இயலாது என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியாது.

கடந்த கால அரசாங்கங்கள் தொடர்பில் அவர்கள் முன்வைத்த அனைத்து விமர்சனங்களையும் இந்த அரசாங்கத்தில் அவர்கள் சரிப்படுத்த வேண்டும்.

இல்லையெனில், 76 ஆண்டுகாலம் இந்த நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ஆகவே, நாட்டு மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆட்சியமைத்துள்ள அநுர அரசாங்கத்திற்கு  நாடாளுமன்றத் தேர்தல் வரையாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

No comments: