News Just In

10/29/2024 04:50:00 PM

இலங்கை கிரிக்கெட் சங்கத்தால் தெரிவான கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவர்!


இலங்கை கிரிக்கெட் சங்கத்தால் தெரிவான கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவர்


மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றிவரும் எம்மா க்ளோரியாவை இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கின் முதல் மகளிர் கிரிக்கெட் நடுவராக தெரிவு செய்துள்ளது.

அண்மையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் சங்கம் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதிற்குட்பட்ட மகளிர் டென்னிஸ் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் நடுவராக எம்மா க்ளோரியா கடமையாற்றினார்.

மட்டக்களப்பு சிசிலியா மகளிர் உயர்தர பாடசாலையின் பழைய மாணவியான இவர் இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்க மட்டக்களப்பு மாவட்ட கிளையின் நடுவர்களுள் ஒருவராவார்.

இவர் வலய, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொண்டு மட்டக்களப்பு மண்ணை பெருமையடையச் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: