News Just In

9/08/2024 07:36:00 PM

மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிக்க ஏகமனதாக முடிவு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
சமூக அபிவிருத்தி சபையின் உயர்பீடம் அமைப்பினுடைய பொதுச்செயலாளர் எஸ்.பஸ்லூன் தலைமையில் மாளிகைக்காடு தலைமைக் காரியாலயத்தில் கூடியது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது என்ற விடயத்தை அமைப்பினுடைய ஸ்தாபக தலைவரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம்.ஜாஹீர் அவர்கள் முன் வைக்க அமைப்பினுடைய பிரதித் தலைவர் பி.சம்சுதீன் அவர்களும் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியரும் அமைப்பினுடைய தேசிய இணைப்பாளருமான எம்.எஸ்.முபாறக் அவர்களும் தற்போதைய ஜனாதிபதியும், ஜனாதிபதி வேட்பாளருமானரணில் விக்கிரமசிங்ஹ அவர்களை ஆதரிக்க முன்மொழிந்தார்கள் .

இதை இளைஞர்களுக்கான இணைப்பாளர் ஏ.சி.எம்.பர்சான் ஆமோதிக்க சபை ஏகமனதாக ஏற்றுகொண்டது.

No comments: