News Just In

9/07/2024 03:20:00 PM

தென்கிழக்குபல்கலைக்கழக பதில் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் உஸ்வா ஒலுவில் அமைப்பால் கெளரவம்!

"ஒலுவில் மண்ணின் மகிமை" எனும் தொனிப்பொருளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் அப்துல் மஜீட் அவர்களுக்கு உஸ்வா ஒலுவில் அமைப்பினரால் கெளரவம்

(எம்.ஏ.ஏ.அக்தார்)
ஒலுவில் கல்வி முத்துக்களில் ஒருவரான இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட பீடாதிபதி கலாநிதி உதுமாலெப்பை அப்துல் மஜீத் அவர்கள் இலங்கை பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் பதில் உபவேந்தராக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு நியமிக்கப்பட்டதனை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வானது ஒலுவில் வாழ் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் நலன்புரி அமைப்பினால் "ஒலுவில் மண்ணிண் மகிமை" எனும் தொனிப்பொருளில் அனைத்து உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாக இடம்பெற்றது .

இந்நிகழ்வில் நலன்புரி அமைப்பினால் உப வேந்தர், அவரது தாய், தந்தை மற்றும் மனைவிக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிற்கப்பட்டது .

No comments: