News Just In

9/07/2024 03:16:00 PM

கல்முனையில் காட்டு யானை தாக்கியதில் 70 வயதுடைய முதியவர் பலி!

கல்முனை பஸ் நிலையத்தில் யாசகம் கேட்கும் 70 வயதுடைய செல்லையா வேலாயுதம் எனும் வயோதிபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு பலி


(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மாநகர பிரதான பஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள வயல் வீதியில் சனிக்கிழமை (7) அதிகாலை யாசகம் கேட்பதற்காக கல்முனை பஸ் நிலையத்தை நோக்கி வந்த இந்த வயோதிபரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.

உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இச் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: