News Just In

9/11/2024 07:30:00 PM

உலக எழுத்தறிவு தினத்தையொட்டி காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

காரைதீவு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட கண்ணகி இந்து வித்தியாலயத்தில் உலக எழுத்தறிவு தினத்தினை முன்னிட்டு மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலமொன்று(11) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை அதிபரின் வழிகாட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி விழிப்புணர்வு ஊர்வலத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது ஆசிரியர்களும் மாணவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

No comments: