News Just In

9/05/2024 01:49:00 PM

பொத்துவில் பிரதேசத்திலுள்ள கோமாரி பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
பொத்துவில் பிரதேசத்தில் அமைந்துள்ள கோமாரி பிரதேச வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் தலைமையிலான குழுவினர் அண்மையில் (3) விஜயம் செய்திருந்தனர்.

வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த கள விஜயம் அமைந்திருந்தது.

இந்த பிரதேசத்திலுள்ள நோயாளர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளுக்கே செல்ல வேண்டியுள்ளது.

இதனை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வைத்தியசாலைக்கு தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வாரத்தில் ஒன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு பற்சிகிச்சைப் பிரிவொன்றினையும் ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments: