
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் ஆதரவைத் திரட்டிக்கொடும் நோக்கோடு, உயர் ரக குதிரைகளைப் பயன்படுத்தி, அம்பாறையில் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பிரதான வீதிகள் ஊடாக குதிரைகளில் பயணித்து, ஜனாதிபதி வேட்பாளர், ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு திரட்;டப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில், இவ்வாறு வித்தியாசமான முயற்சிகளில் வாக்குச் சேகரிப்பும் நடைபெறுகிறது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: