News Just In

9/08/2024 06:09:00 AM

ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி தங்கம் வென்று சாதனை!





(எஸ்.அஷ்ரப்கான்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி-2024 இல் ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி ஆர்.எப்.ஸமா பரிதி  வட் டம்  வீசுதல் நிகழ்ச்சியில் 1ம் இடம் பெற்று தங்கம் வென்று சாதனை நிலைநாட்டினார்.

மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று (07) நடைபெற்ற போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இம் மாணவியை பயிற்றுவிக்க, இப்போட்டிகளுக்காக ஆலோசனை மற்றும் அனுமதியினை வழங்கிய அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், பிரதி, உதவி அதிபர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்து அழைத்துச்சென்ற விளையாட்டுப் பொறுப்பாசிரியரும் இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் பயிற்றுப்விப்பாளருமான ஆர்.நௌசாட், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.அஸ்மத் சஹி மற்றும் பல வழிகளிலும் ஆலோசனைகள் வழங்கி உதவிய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.கியாஸ், இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீன் உட்பட ஒத்துழைத்த நிர்வாகத்தினருக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக
அறிவித்துள்ளது.

No comments: