News Just In

9/16/2024 11:20:00 AM

எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் மீலாத் நபி நிகழ்வும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் நினைவாக "தலைவர் தின" நிகழ்வும்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகிலத்துகோர் அருட்கொடையாம் உத்தம நபியின் மீலாத் நபி நிகழ்வை முன்னிட்டும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டும் நினைவுப் பேருரையும் கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் கல்முனைக் காரியாலயத்தில் (16) நடைபெற்றது.


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம் வஸீர்,எம்.எச் கலீலூல் ரஹ்மான்,ஏ.எம் பறக்கத்துல்லாஹ், மெளலவி எம்,ஏ.எல் நாஸர் (மன்பஈ), எம் ஜமாலுடின் (ஹாஸிமி),கட்சியின் முக்கியஸ்தகர்களான அன்வர் நெளசாத்,தேசமானிய ஏ.பி ஜெளபர்,எம் ரியாஸ்,ரைஸுல் ஹக்கீம்,எம்.இம்சாட்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டு மறைந்த தலைவரின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக விசேட துஆப் பிரார்த்தனை செய்ததோடு உத்தம நபி (ஸல்)அவர்கள் நினைவு சொற்பொழிவு மெளலீது நிகழ்வும் இடம்பெற்றது.

No comments: