News Just In

9/10/2024 04:21:00 PM

திடீரென பொதுக்கட்டமைப்பு எவ்வாறாக உருவானது?


தமிழ் பொதுக்கட்டமைப்பு திடீரென உருவான ஒன்று என்று நீங்கள் கூறுவீர்களாக இருந்தால், நீங்கள் தமிழர்களின் தணியாத அரசியல் வேலைமுயற்சியில் இருந்து விலகி இருக்கின்றீர்களோ என்ற ஐயத்தையே நீங்கள் எமக்கு ஏற்படுத்துவதாக நாம் காண்கின்றோம்.

2009 நவம்பரில் இருந்தே அரசியல் ரீதியான தயார்படுத்தல்களை/பொதுவேட்பாளரை குறித்த எண்ணங்களை தமிழரசுக் கட்சியில்(த. தே. கூ) பலதடவை எடுத்துக் கூறப்பட்டது. இவை யாவும் புறந்தள்ளப்பட்டு இலங்கை அரச விசுவாசிகள் தமிழ்மக்களிடையே ஆக்கிரமிப்பை செய்தனர். இந்த ஆக்கிரமிப்புக்களை இவற்றை எல்லாம் தகர்த்து எறிய தமிழ் மக்களுக்கு ஒர் காலம் தேவைப்பட்டது. அது மட்டுமன்றி தோற்றுப் போனோம் என நம்பிக்கை இழந்த மக்களை ஆற்றுப்படுத்தவேண்டியும் இருந்தது. தமிழ்மக்களின் அரசியல் ரீதியாக வெற்றிபெறச் செய்ய இலங்கை மண்ணுக்குள் இருந்தும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலங்கை மக்கள் மீது தீராத பற்றுக் கொண்ட மக்கள் சனநாயக வழிமுறைக்குள் நின்று போராடிக் கொண்டே இருந்தனர். இந்தப் போராட்டத்தின் திரட்சியையே நீங்கள் இப்போது பொதுவேட்பாளராக காண்கின்றீர்கள். இதனை நீங்கள் கண்டவுடன் அதிசயமாக ஏதோ புதுமையாக காண்கின்றீர்கள். இது ஏதோ அதிசயம் என்கின்றீர்கள்.இந்தப் புதுமைகள் இன்னும் வரும். அப்போது விழிகளை விளித்து ஆச்சரியப்பட தயாராகவே இருங்கள்.

மக்களுக்கான நியாயமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட, இப்பணிகளை தொடர்ச்சியாகவே செய்துகொண்டே இருந்தபோது எம்மைப் பார்த்து ஏமாற்றிகள் என்றும், வேலையில்லாதவர்கள் என்றும், பணத்தை உழைக்கவே இதனை செய்வதாகவும், கைக்கூலிகள் என்றும், இன்னும் பல ஜீரணிக்க முடியாத வார்த்தைகளை கொண்டும் எதிரியின் விசுவாசிகள் எம்மைத் தாக்கினர். அவர்கள் எறிந்த கற்களைக் கொண்டே நாம் எமக்கான அழகான கட்டடங்களை கட்டினோம். இன்றும் சிலர் தமிழ்பொது வேட்பாளரின் வளர்ச்சியைக் கண்டு முகவலைகளில் ஊளையிடுகின்றனர். இவர்களுக்கும் எமது பதில் புன்னகையே.
நாம் என்பது எம் மக்களே

காவியா
பெரியபிரித்தானியா

No comments: