News Just In

9/05/2024 01:38:00 PM

ஊடகத்துறையில் அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளை வலுவட்டும் செயலமர்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா யுனைட்ஸ் செயற்பாட்டு நிலையம் ஒழுங்கு செய்திருந்த ஊடக கல்வியறிவு மற்றும் விமர்சன சிந்தனை பற்றிய செயலமர்வு அம்பாறை செயற்பாட்டு நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.

நம்பகமான தகவல் தொடர்பு ஆதாரங்களை நம்பத்தகாத தகவல் தொடர்பு மூலங்களிலிருந்து வேறுபடுத்தி அறியவும், தவறான தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் நுட்பங்களைப் புரிந்துகொள்ளவும் , சமூகத்தில் உள்ள தவறான தகவல்களைக் கண்டறிந்து அது பரவுவதைத் தடுப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களின் கடமை தொடர்பில் இந்த செயலமர்வில் விரிவாக ஆராயப்பட்டது.

இந்த செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப்பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூவின இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர்.

No comments: