News Just In

9/12/2024 10:10:00 AM

மட்டக்களப்பு பெற்றி பிக் பாஸ் ஜூனியர் கிறிக்கட் போட்டியில் பழுகாமம் புள்ஸ் அணி சம்பியனானது!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் அபிவிருத்தி சபை ,மட்டக்களப்பு மாஸ்டர் கிரிக்கெட் கிளப் ஆகியன இணைந்து முதல் தடவையாக நடத்திய 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான பெற்றி பிக்பாஸ் (Batti Bigbash) ஜூனியர் போட்டிகளில் மட்டக்களப்பு பழுகாமம் புள்ஸ்( Palukamam Bulls) அணி சாம்பியன் மகுடத்தை சூடியது.

மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பழுகாமம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 133 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பிடத்தாடிய காத்தான்குடி லயன்ஸ் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 113 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது, இதன் மூலமாக 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பழுகாமம் அணி சாம்பியன் மகுடத்தை தனதாக்கியது.

இறுதிப் போட்டியின் நாயகனாக நித்தியதர்சன் தேர்வு செய்யப்பட்டார்.

No comments: