
(எம்.எம்.ஜெஸ்மின்)
ஜமால்முகம்மது முகம்மது சறூக் (வைத்தியசாலை ஊழியர்) - செய்யது இப்றாகீம் நகீபா (ஆசிரியை – அல்-ஹிலால் கனிஷ்ட) தம்பதியினரின் மகளான பாத்திமா அஸ்ஹா 2024 யில் நடைபெற்ற இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப சேவையில் வகுப்பு 2 தரம் ll க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தி பெற்று (Tamil Medium All Island Rank - 2, All Island Rank - 15) கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்று இலங்கை தகவல் மற்றும் தொடல்பாடல் தொழிநுட்ப சேவைக்கு (SLICTS) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாத்திமா அஸ்ஹா நிலைநாட்டியுள்ள இச் சாதனை ஒரு மிகப் பெரும் அடைவு. இந்த அடைவானது மூதூர் மண்ணைப் பொறுத்த வரையில் மிகப் பெரும் வரலாற்றுச் சாதனையாகும்.
No comments: