News Just In

8/14/2024 10:36:00 AM

சாய்ந்தமருது அல்-ஹிலால் பாடசாலை முன்பாக இடம்பெற்ற விபத்தில் சம்மாந்துறை நபர் மரணம்!



(எஸ். அஷ்ரப்கான்)

கல்முனை நோக்கி பயணித்த நபர், கனரக வாகனத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே மரணித்துள்ளார். இவ்விபத்து இன்று (14) காலை 7 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவர் சம்மாந்துறை கைகாட்டி, கல்லரச்சல் எனும் பிரதேசத்தை சேர்ந்த முஹம்மட் றமீஸ் என்று அழைக்கப்படும் நபர் ஆவார்.

இவர் வயல் வேலை செய்வதற்கான நெல் உலர்த்தல் படங்கு ஒன்றை பெறுவதற்கு சாய்ந்தமருது நோக்கி வரும் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: