(அஸ்ஹர் இப்றாஹிம்)
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ தோட்டத்திற்கு அருகில் சனிக்கிழமை (10) மாலை முச்சக்கர வண்டியொன்றும் சிறியரக பட்டா லொறியும் மோதுண்டதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லதண்ணியிலிருந்து மஸ்கெலியாவிற்கு பால் ஏற்றிச் சென்ற பட்டா ரக லொறியும், மஸ்கெலியா இருந்து நல்லதண்ணி நோக்கி வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதுண்டதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன்,முச்சக்கர வண்டி சாரதியும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: