News Just In

8/26/2024 07:01:00 AM

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் மாங்கேணி காட்டுப் பகுதியில் விபத்து!





(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி மாங் கேணி காட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதி தூங்கியதால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும்,இவ்விபத்தில் காயமடைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments: