News Just In

8/05/2024 07:51:00 AM

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம் இன்றுடன் நிறைவு!





ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்துவதற்காக வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியேகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்படிவங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்படுமென பரவும் தகவல் பொய்யானதெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

No comments: